பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் மின்சார பாவனை! குளிரால் ஏற்பட்ட மாற்றம்!

2023-2024 ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது பயன்படுத்தப்பட்ட அதிகூடிய மின்சார பானவனை நேற்று ஜனவரி 10 ஆம் திகதி பதிவானது. பிரெஞ்சு மின்சார வழங்குனர்களான RTE, இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி அளவில் 83.5 ஜிகா வாட்ஸ் (GW) மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பலத்த குளிர் நிலவிய நிலையில், இந்த அதிகூடிய மின்பாவனை பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இது பிரான்சின் இதுவரை பயன்படுத்தப்பட்ட அதிகூடிய மின்பாவனை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடும் குளிர் நிலவியிருந்தது. பெப்ரவரி 8 ஆம் திகதி மாலை 7 மணி அளவில் 102.98 ஜிகாவாட்ஸ் (GW) மின்சாரத்தை பிரெஞ்சு மக்கள் பயன்படுத்தியிருந்தனர்.

Back to top button