தாயகம்

இலங்கையில் மீண்டும் பரபரப்பு! மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்!

நாட்டின் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்தச் சடலங்கள் நேற்று (25.02.2024) மீட்கப்பட்டுள்ளன. குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள கங்கையிலிருந்து நிர்வாணமாக 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேலியகொட 4ஆம் மைல் கல்லுக்கு அருகில் பட்டியசந்தி பகுதியில் தொடருந்தில் மோதி உயிரிழந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான சேட்டும், கறுப்பு நிறத்திலான காற்சட்டையும் அணிந்திருந்துள்ளதுடன் வலது கையில் பச்சை குத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மாரவில பகுதியிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து நிர்வாணமான நிலையில் 55 முதல் 60 வயதுடைய ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


மேலும், ராகமை – கடவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் சாம்பல் நிற புடவை மற்றும் கறுப்பு கை சட்டை அணிந்துள்ளதுடன் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Back to top button