தாயகம்

பரபரப்பான கொழும்பு! குடும்பஸ்தர் பலி!

மோட்டார் சைக்கிள் ஒன்றை காரினால் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தெஹிவளை – கடவத்தை வீதியில் பெரக்கும் மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மொரட்டுவை அல்விஸ் பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடையவராவார்.

இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றின் மீது மோதியதில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் தகராறு இதனால் கோபமடைந்த காரின் சாரதி, மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரான காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பொறியியலாளராவார். காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

Back to top button