தாயகம்

தென்னிலங்கையில் இன்று மீண்டும் பரபரப்பு! ஒருவர் பலி!

கொழும்பு மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (2024.02.21) காலை 7.15 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என தெரியவந்துள்ளது.

Back to top button