பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் கத்தி குத்து தாக்குதல்!

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Bir-Hakeim மேம்பாலத்தில் கத்தி குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதசாரி ஒருவரை வழிமறித்து தாக்குதல் நடத்திய இருவர், அவரிடம் இருந்து பணத்தினைக் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதி, நேற்று திங்கட்கிழமை காலை 6 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Trocadero நிலையத்தில் வைத்து குறித்த நபரை சுற்றிவளைத்த தாக்குதலாளிகள், அவரிடம் கொள்ளையிட முயற்சித்திருந்தனர்.

ஆனால் அங்கு ஏராளமான பயணிகள் இருந்தமையினால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சிறுது நேரம் கழித்து குறித்த நபரை கொள்ளையர்கள் Bir-Hakeim மேம்பாலத்தில் வைத்து வழிமறித்துள்ளனர்.

இப்போது கத்தி ஒன்றை எடுத்த கொள்ளையர்கள், அவரின் தொடை மற்றும் தோள்பட்டை பகுதியில் குத்தி தாக்கிவிட்டு அவரிடம் இருந்து பணத்தைக் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான நபர் Georges Pompidou மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் முதலாம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button