இலங்கையில் காதலன் மற்றும் காதலி அதிரடி கைது! அதிர்ச்சி காரணம்!
போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் வாதுவை – பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாதுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் 30 வயது இளைஞராவர்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரான சிறுமி ஹொரணை பிரதேசத்தில் மேலதிக வகுப்பொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் தனது காதலனான இளைஞருக்காக போதைப்பொருளை பாதுகாப்பாக தன்வசம் வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களா என பரிசோதிப்பதற்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதுடன் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.