தாயகம்

பாடசாலை ஒன்றில் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அதிபர் கைது!

பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு உட்படுத்திய குற்றச்சாட்டில், 53 வயது பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை கலபெத்த மகா வித்தியாலய அதிபர், பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொம்பகஹவெல பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

கலபெத்த அலபொத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இந்த பெண், கடந்த (28) உணவகத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் பாடசாலை ஆசிரியை ஒருவர் வந்து, சிற்றுண்டிச்சாலையில் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்று கூறினார். இதனையடுத்து உரிமையாளரான பெண் , மாலை 3.40 மணியளவில் பாடசாலைக்கு விளக்குகளை அணைக்கச் சென்றுள்ளார்.

விளக்குகளை அனைத்துவிட்டு வீடு திரும்ப இருந்தபோது, தலைமை ஆசிரியர் அவளை அலுவலகத்திற்கு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் தொம்பகஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button