பிரான்ஸ்

பிரான்ஸில் வங்கி சேவைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு!


வங்கிச் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. l’Observatoire des tarifs bancaires இதனை உறுதி செய்துள்ளது. வங்கிகளில் பண மாற்று, வைப்பிலிடுதல், இணையம் மூலமான சேவைகள் போன்ற அடிப்படைச் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணம் 3% சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளது.

€20.60 யூரோக்கள் வருடாந்த கட்டணம் €21.22 யூரோக்களாக அதிகதிக்கப்பட உள்ளது. வங்கிகள் இதுவரை தங்களுடைய கட்டண அதிகரிப்பை அறிவிக்கவில்லை என்றபோதும், மிக விரைவில் அக்கட்டணங்கள் தொடர்பில் தகவல் வெளியாகும் என அறிய முடிகிறது.

Back to top button