பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் ஜனாதிபதியின் வேண்டுகோள்!

இந்த 2024 ஆம் ஆண்டை உடற் செயற்பாட்டுக்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அதனை அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் முகமாக Arc de Triomphe கட்டிடத்தில் சில வார்த்தைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
“grande cause nationale 2024” எனும் திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று வருடத்தின் முதல் நாள் அறிமுகப்படுத்தி வைத்தார். அனைவரும் மாதத்தின் 30 நாட்களும் ஏதேனும் ஒரு உடல் ரீதியான செயற்பாடுகளிலோ, விளையாட்டுக்களிலோ ஈடுபடவேண்டும்.

இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
மேற்குறித்த நிகழ்வை அறிவிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணி அளவில், Arc de Triomphe கட்டிடத்தில் “Bouge tous jour” எனும் வார்த்தைகள் ஒளிரவிடப்பட்டன. இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் Amélie Oudéa-Castéra பங்கேற்றார்.

Back to top button