உலகம்

🇨🇦கனடாவில் ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட நிலை! வழங்கப்பட்ட தீர்ப்பு!

கனடாவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஈழத் தமிழருக்கு நீதிமன்றம் கடும் அபராதம் !!

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உழைப்புக்குப் பெயர்பெற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுவருகின்ற அதேவேளை, ஒரு சிலரது நேர்மையற்ற செயல் காரணமாக, தமிழர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

கனடா ஒன்டாரியோ நீதிமன்றம் அண்மையில் ஈழத் தமிழர் ஒருவருக்கெதிராக வழங்கியிருந்த தீர்ப்பானது, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களை தலை குனிய வைத்துள்ளது.

ஈழத்தமிழருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சொகுமனைகள் விற்பனை செய்வதாகக் கூறி சட்டவிரோதமாக ஐந்து மில்லியன் டொலர்ஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் அடிப்படையில் வீடுமனைகளை நிர்மானிப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு உரிய அனுமதி இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஓன்டாரியோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றவாளியாகக் காணப்பட்ட அந்த ஈழத் தமிழருக்குச் சொந்தமான நிறுவனம், கனடா வீட்டு நிர்மான அதிகாரசபைக்கு (Home Construction Regulatory Authority (HCRA) 180,000 டொலர்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 5 மில்லியன் டொலர்ஸ் பணத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்பத்தளித்துள்ளது.

அத்தோடு 34,000 டொலர்ஸ் தண்டப் பணம் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Back to top button