தாயகம்

தமிழர் பகுதியில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!

திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (01.03.2024) மாலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த பொலிஸ் பிரிவின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.

இது வரை இனங்காணப்படாத நிலையில் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமான ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது வரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சடலத்தை இனம் காண்பதறகான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button