உலகம்
பிரித்தானியாவில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரித்தானியாவில் ஹென்க் புயலின் தாக்கத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்து ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் சுமார் 1000 வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து தாமதமாகலாம் அல்லது, இரத்து செய்யப்படலாம் என பிரித்தானிய தொடருந்து நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.