தாயகம்

குடும்ப தகராறால் ஏற்பட்ட கொடூரம்!

காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் 2 கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக நேற்று மாலை குறித்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றத்தைச் செய்த பின்னர், சந்தேகநபரான கணவர் கையடக்கத் தொலைபேசியுடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதான மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தொடந்துவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஆசிரியை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரின் கணவர் 2018 ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையாற்றி சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியவர் எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Back to top button