இலங்கையில் திடீரென இரத்துச்செய்யப்பட்ட விமானங்கள்!
இலங்கையில் இன்று 06 விமானங்கள் திடீரென இரத்துச்செய்யப்பட்டமையினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் வருந்துவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
கட்டுநாயக்கவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கன் விமான சேவையில் தொழில்நுட்ப கோளாறுகள்
ஸ்ரீலங்கன் விமான சேவையில் தொழில்நுட்ப கோளாறுகள், விமான உதிரி பாகங்கள் தட்டுப்பாடு, ஊழியர்களின் பிரச்சினைகள் என பல நெருக்கடிகள் காணப்படுகின்றன.
இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தன்னிடம் பல ஆலோசனைகள் இருப்பதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அதுல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், விமானங்களுக்கான டிக்கெட்டுகள் பல மாதங்களுக்கு முன்னரே விற்பனை செய்யப்படுவதாகவும், சில நேரத்தில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், விமானங்களை இரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்தியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இடங்களுக்கு செல்லவிருந்த 06 விமானங்கள் இன்று (27) இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.