உலகம்

🇨🇦கனடா எல்லையை கடக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்!

கடந்த மாதம் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையை கடக்க முயன்று மரணமடைந்த பெண் ஒருவருக்காக மாண்ட்ரீலில் அஞ்சலி கூட்டம் ஒன்று நடைபெற்றது. புதிய வாழ்க்கையை தொடங்கும் பொருட்டு
மெக்சிகோ நாட்டவரான 33 வயது Ana Karen Vasquez Flores என்பவரே கடந்த மாதம் எல்லையை கடக்க முயன்று சடலமாக மீட்கப்பட்டவர். இவரது கணவர் அமெரிக்காவில் காத்திருப்பதால், புதிய வாழ்க்கையை தொடங்கும் பொருட்டு இவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து கியூபெக் பகுதிக்கு வந்து சேர்ந்த Vasquez Flores தமக்கு எல்லையை கடக்க உதவும் பொருட்டு அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பணம் அளித்துள்ளார். இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியான அவர் டிசம்பர் 14ம் திகதி நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமது மனைவியை சந்திப்பதாக காத்திருந்து ஏமாற்றமடைந்த கணவரே இரண்டு நாட்களுக்கு பின்னர் எல்லையோர ரோந்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போது கியூபெக்கில் வசிக்கும் கொலம்பிய நாட்டவரான 35 வயது நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பத்திரமாக அமெரிக்காவில் அனுப்பி வைப்பதாக குறித்த நபர் எல்லையை கடக்க உதவுவதாக கூறி ஏற்கனவே விளம்பரம் செய்து வந்துள்ளார். மேலும், மரணமடைந்த Vasquez Flores என்பவரிடம் இருந்து கட்டணமாக 2,500 டொலர் வசூலித்துள்ளார். மட்டுமின்றி பத்திரமாக அமெரிக்காவில் அனுப்பி வைப்பதாகவும் அந்த நபர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதுகாப்பான எல்லைக் கொள்கைகளை உருவாக்க பல அமைப்புகள் அரசாங்கத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

Back to top button