பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் போதைப்பொருள் விற்பனை! உள்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

பிரான்சில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் 1,000 இடங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை Créteil (Val-de-Marne) நகருக்கு பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் Gérald Darmanin, அங்கு வைத்தே இதனைத் தெரிவித்தார். போதைப்பொருள் நடவடிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் மிகவும் பலமாக இடம்பெற்றதாகவும், அதிகளவு போதைப்பொருட்கள் மற்றும் களவாடப்பட்ட பொருட்கள் விற்பனை போன்றனை தடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

36,429 பேர் கடந்த ஆண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 157 தொன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் பிரதான இடங்களும், 4,000 சிறிய இடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button