பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் இரு பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமை!

இரு இளம் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Vitry-sur-Seine (Val-de-Marne) நகரைச் சேர்ந்த, சமூகவலைத்தளத்தில் செயற்பட்டு வரும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரு பெண்கள் சந்திக்க வருகை தந்துள்ளனர். பின்னர் அவர்களுடன் குறித்த நபர் இரவு விடுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர்களுக்கு அதிகளவு மது வாங்கிக்கொடுத்து, அதை சாதமாக பயன்படுத்தி அவர்களை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.
மறுநாள் சனிக்கிழமை (நேற்று) காலை 10 மணி அளவில் அவர்கள் காவல்துறையினரை அழைத்துள்ளனர்.

பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர் மீது அவ்விரு பெண்களும் வழக்கு தொடுத்துள்ளனர்.
காவல்துறையினரது விசாரணைகளின் போது, இது ஒருமித்த சம்மதத்துடன் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

Back to top button