பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பா-து-கலே மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை பா-து-கலே உள்ளிட்ட நான்கு மாவட்டங்க்ளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Pas-de-Calais, Ardennes, Meuse மற்றும் Nord ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பா-து-கலே மாவட்டம் கடந்த இரு வாரங்களாக வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கியுள்ளமை அறிந்ததே. நேற்று வியாழக்கிழமை இரவு 59 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மொத்தமாக 710 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

Back to top button