பிரான்ஸ்

பிரான்ஸ் டிஜிட்டல் விசா! யார் யார் விண்ணப்பிக்கலாம்!

டிஜிட்டல் விசா வழங்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு என்னும் பெருமையைப் பெற்றுள்ளது பிரான்ஸ் நாடு 2024, ஜனவரி 1ஆம் திகதி முதல், டிஜிட்டல் ஷெங்கன் விசாக்களை (Digital Schengen visas) வழங்கத் துவங்கியுள்ளது பிரான்ஸ். பாரீஸில் நடைபெற இருக்கும் 2024 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை மனதில் கொண்டு, பிரான்ஸ் அதிகாரிகள் 70,000 டிஜிட்டல் விசாக்களை வழங்க உள்ளார்கள்.

ஆனால், இந்த விசாக்கள் எல்லோருக்கும் அல்ல! டிஜிட்டல் விசா யார் யாருக்கு?
இரண்டு குழுவினர் மட்டுமே இப்போதைக்கு இந்த டிஜிட்டல் விசாக்களுக்கு விண்ணப்பிக்கமுடியும் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஒன்று, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள், விளையாட்டு அமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் முதலானோர். இரண்டு, ஒலிம்பிக் அல்லது பாரா ஒலிம்பிக் கமிட்டியால் அழைப்பைப் பெற்றுள்ள விருந்தினர்கள். ஆக, இப்போதைக்கு, விளையாட்டைப் பார்வையிடச் செல்லும் ரசிகர்களுக்கு டிஜிட்டல் விசா கிடையாது. அவர்கள் வழக்கம்போல ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பித்துதான் விசா பெறமுடியும்!

Back to top button