தாயகம்

மீண்டும் கனடா மோசடி! அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் மாலம்பே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கனடாவில் கணக்காளராகக் கடமையாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். இது தொடர்பில் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைதான சந்தேக நபர் சுமார் 8 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் இவர் மாலம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .

Back to top button