பிரான்ஸ்

🇫🇷அகதிகளை வெளியேற்றும்படி பெரும் போராட்டம்! தொடரும் பதற்ற நிலை!

கடந்த 22ம் திகதி முதல் வீதி மறியல், போராட்டம், காவற்துறையினர்க்கும் போராட்டக்காரர்களிற்கும் இடையே பெரும் முறுகல்நிலை என, பிரான்சின் கடல்கடந்த மாகாணமான மய்யோத்தில் (Mayotte) பெரும் பதற்ற நிலை உருவாகி உள்ளது. இந்து சமுத்திரத்தில் உள்ள மய்யோத்தில், கடுமையான தண்ணீர்ப் பஞ்சம், கட்டுங்கடங்காத ஆபிரிக்க அகதிகள் மற்றும் நிறைந்து வழியும் குடியயேற்றம் எனத் தொடர்ச்சியான பிரச்சினைகளினால், இங்கு உள்ள ஒருங்கிணைந்த மக்கள் அமைப்பு தொடர்ச்சியான போராட்டம் நடாத்தி வருகின்றது. பரிஸ், மய்யோத்தின் மீது பாராபட்சம் காட்டுகின்றது.

எந்தப் பிரச்சினைகளிற்கும் தீர்வுகள் கிடைக்கவில்லை« என நடக்கும் போராட்டத்தை அடக்க வரும் ஜோந்தார்மினருடன் பெரும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. கப்ரியல் அத்தாலின் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள கடல்கடந்த மாகாணங்களிற்கான புதிய அமைச்சர் மரி குவெனூ (MARIE GUÉVENOUX), உள்துறை அமைச்சர் ஜெராலட் தர்மனமன், வெளிநாட்டவரிற்கான அமைச்சர் மற்றும் ஜோந்தார்மின் தலைவர் ஆகியோர் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.

Back to top button