தாயகம்

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்! ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சிறுமி!

தாயாரால் பலருக்கு விற்கப்பட்ட இலங்கை சிறுமி ஒருவர் ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த நிலையில், பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய பிரஜை ஒருவரின் கீழ் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

தாயின் மோசமான செயல் இந்நிலையில் குறித்த சிறுமி கடத்தப்படவில்லை எனவும் குறித்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து மீண்டும் நாடு திரும்பிய நிலையில் அவர் பல வருட காலமாக படல்கம பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவருடன் பழகி வந்துள்ளதாகவும் பல்வேறு வெளிநாட்டவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாய் , சிறுமியை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் பின்னர் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சிறுமி காணாமல் போயுள்ளதுடன் இத்தாலி பிரஜை ஒருவரின் கீழ் இந்த சிறுமி கடத்திச்செல்லப்பட்டதாக கூறி தாய் , படல்கம பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமியை கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள கூலி வீடொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி பாதுகாவலரின் கீழ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button