தாயகம்

யாழில் பாரிய விபத்து! சாரதி படுகாயம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயம் முன்பாக லொறி ஒன்று கடைக்குள் நுழைந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (7) 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாரதி படுகாயம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பியுள்ளது.

இதன்போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது.

மேலும் சம்பவத்தில் லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Back to top button