தாயகம்

தமிழர் பிரதேசத்தில் கோர விபத்து! ஒருவர் பரிதாப பலி!

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.


இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர். மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செம்மலையை சேர்ந்த நாகராசா யோகராசா (வயது-54) என்பவர் இன்று (02) அதிகாலை மரணமடைந்துள்ளார்.
குமுழமுனை பகுதியிலிருந்து வந்து விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுபவர்கள் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தள்ள நிலையில் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு விபத்து சம்பவங்களினால் அநியாயமாக உயிர்பிரிகின்ற மனிதர்களையும் படுகாயங்களால் பாதிக்கப்படுகின்ற மனிதர்களையும் நம்பி அவர்கள் சார்ந்த குடும்பங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நெருக்கடியான நிலையில், அந்த குடும்பங்கள் எவ்வளவு துன்பங்கள் துயரங்களை அனுபவிக்கப் போகின்றன.

Back to top button