தாயகம்

வெளிநாடு ஒன்றில் சாதனை படைத்த யாழ் இளைஞன்!

தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக்காட்சியில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை இளைஞர் சாதனை படைத்துள்ளார். இந்தவருடம் நடைபெற்ற யாழ்ப்பாணம் வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் யாழ் விநோதன் பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். தனது அபாரமான‌ கற்பனைத்திறனைக் கொண்டு போர்தாங்கி ஆகாய விமானத்தை வல்வை வான்‌வெளியில் பறக்கவிட்டு யாழ் விநோதன் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற பட்டக்காட்சியில் , இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டு அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார்.


தாய்லாந்தில் இரண்டு பட்டங்களை கட்டி ஒப்பணை பார்த்து பல நாட்டு மக்கள் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார். அத்துடன் அங்கு பங்கு பற்றிய பல நாட்டுக் கலைஞர்களும் விநோதனின் கைவண்ணப் பட்டத்தினை பாராட்டியுள்ளனர் . அதேவேளை உலக வரலாற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி தாய்லாந்தில் நடைபெறும் பட்டப் காட்சியில் பங்குபற்றுவது இதுவே முதன்‌முறை என்பதும், அதில் யாழ்ப்பாண இளைஞர் சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button