தாயகம்

யாழில் நபர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் குடும்பம்!

யாழ்ப்பாண பகுதியொன்றில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (25-02-2024) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிவாயநம சுயாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Back to top button