பிரான்ஸ்

🔴🇫🇷பிரான்ஸில் வினோத வழக்கு! நீதிமன்றின் உத்தரவு!

பிரான்சில் பூனை ஒன்று அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில், அந்த பூனைக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த தீர்ப்பு குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம், பிரெஞ்சு நகரமான Lilleஇல், சுமார் ஒரு வயதுடைய லானா (Lanna) என்னும் பூனை ஒன்று குப்பைத்தொட்டி ஒன்றிற்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அந்த பூனையின் உரிமையாளர், ஆட்டிஸக் குறைபாடு கொண்ட தன் மகனை அந்தப் பூனை கீறியதால் அதை அடித்துக்கொன்றதாக ஒப்புக்கொண்டார். கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கில் அந்த பூனையின் உரிமையாளருக்கு Lille நீதிமன்றம் எட்டு மாத சிறைத்தண்டனை விதித்ததுடன், இனி அவர் செல்லப்பிராணிகளை வளர்க்க தடையும் விதித்து தீர்ப்பளித்தது.

அத்துடன், அந்தப் பூனைக்கு 100 யூரோக்கள் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி, ஒரு பூனைக்கு இழப்பீடு வழங்கப்படுவது பிரான்ஸ் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். விலங்குகள் நல அமைப்பினர் எழுப்பியுள்ள கேள்வி
இந்த தீர்ப்பு வரவேற்பைப் பெற்றுள்ள அதேநேரத்தில், பிரான்சின் Society for the Protection of Animals (SPA) என்னும் விலங்குகள் நல அமைப்பின் தலைவரான Jacques-Charles Fombonne என்பவர், விலங்குகள் நல அமைப்பின் தலைவர் என்ற முறையில் ஒரு விலங்குக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில், எந்த சட்ட அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது எனக்குப் புரியவில்லை என்கிறார். அதேபோல, Poitiers பல்கலை சட்டத்துறைப் பேராசிரியரான , Fabien Marchadier என்பவரும், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பூனையை ஒரு நபரைப்போல கருதி தீர்ப்பளிக்கப்பட்டிருக்குமானால், அந்த தீர்ப்பு, விலங்குகளை இனப்பெருக்கம் செய்து, அவற்றின்மீது மருத்துவப் பரிசோதனைகள் செய்வது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்கிறார் அவர்.

Back to top button