தாயகம்

இலங்கையில் ஆரம்பமான விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் GOAT என்ற படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஏற்கனவே படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இலங்கை வந்து, ‘லொக்கேசன்’ பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
இன்று 4-ம் திகதி முதல் படப்பிடிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை விஜய் நடிப்பில் உருவாகும் GOAT திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Back to top button