பிரான்ஸ்
🇫🇷பிரான்ஸ் உள்துறை அமைச்சரின் எச்சரிக்கை!
ஒலிம்பிக் போட்டிகளுக்காக இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் போது மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக தகவல்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் போது பரிசில் தொழிலில் ஈடுபடும் விலைமாதுகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், அவர்கள் சிறப்பு கண்காணிப்பு உள்ளாகுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சமூகவலைத்தளங்களூடாக இளைஞர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். அல்லது கட்டாயப்படுத்தி ஈடுபட வைக்கின்றனர். அவர்கள் தொடர்பில் தீவிர விழிப்புணர்வுடன் காவல்துறையினர் செயற்படுவார்கள் எனவும், சட்டவிரோதமான செயற்பாடுகள் தவிர்க்கப்படுதல் வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.