தாயகம்

🔴இன்று காலை இலங்கையில் நிகழ்ந்த பயங்கரம்! துடிதுடித்து பறிபோன உயிர்கள்!

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இச்சம்பவம் இன்றைய தினம் காலை (22-01-2024) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, டிபெண்டர் ரக வாகனம் ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Back to top button