தாயகம்

இலங்கையில் பரிதாபமாக பலியான தந்தை மற்றும் மகன்!

கொழும்பு ஹைலெவல் வீதியில் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (8) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 44 வயது தந்தை மற்றும் 8 வயது மகனாவார். சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் சக்கரம் வெடித்ததால் நேர்ந்த விபரீதம் கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் சக்கரமொன்று திடீரென வெடித்ததில் , லொறி வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Back to top button