தாயகம்

🔴யாழில் கோர விபத்து! தந்தை , குழந்தை உயிரிழப்பு!

யாழ். இணுவில் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வானகம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தந்தை, மகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தாய் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் மாலை (14-02-2024) இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற ரயிலுடன் இணுவில் பகுதியில் ஹயஸ் வாகனம் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இணுவில் பகுதியை சேரந்த 32 வயதுடைய சயந்தன் , 22 வயதுடைய மனைவி சயந்தன் பிரியங்கா, 6மாதங்களான அவர்களின் பெண் குழந்தை ஆகியோர் சென்ற வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்ததுடன், தாய் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button