தாயகம்

இலங்கையில் 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! துடிக்கும் பெற்றோர்!

விளையாடிக் கொண்டிருந்தபோது 4 வயது சிறுவன் லொறி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தளம் கற்பிட்டி நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதிக்கு வந்த போது விபத்து வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தனது சிறிய துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறுவன் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா வகையைச் சேர்ந்த லொறி ஒன்றும் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

Back to top button