பிரான்ஸ்

பிரான்ஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! அதிகரிக்கப்படும் சமூக கொடுப்பனவு!

revenu de solidarité active (RSA) உள்ளிட்ட பல சமூக கொடுப்பனவுகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்பட உள்ளன. கிட்டத்தட்ட பத்து வரையான சமூகக்கொடுப்பனவுகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட உள்ளன. பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பு இடம்பெற உள்ளது.

தனி ஒரு நபருக்கான RSA கொடுப்பனவுகள் €607.5 யூரோக்களில் இருந்து 635.71 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. இரண்டு பிள்ளைகள் உள்ள குடும்பத்தினருக்கு பிள்ளை ஒன்றுக்கு வழங்கப்படும் €141.99 யூரோக்கள் ஏப்ரல் 1 முதல் €148.52 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

இதுபோன்று மாற்று திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள், வேலை தேடுவோருக்கான கொடுப்பனவுகள் என பத்து வரையான சமூக கொடுப்பனவுகள் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட உள்ளன.

Back to top button