உலகம்

ஜேர்மனியில் பொலிசாரை தாக்கிய அகதிகள்!

ஜேர்மனியில் பொலிசாரை தாக்கிய புலம்பெயர்ந்தோர் ஒருவர், பொலிசார் தாக்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
ஊழியர்களைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனியின் Mülheim நகரில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில், புலம்பெயர்ந்தோர் ஒருவர், ஊழியர்களைத் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் அங்கு விரைந்த நிலையில், கினியா நாட்டவரான அந்த 26 வயது இளைஞர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அவரைக் கட்டுப்படுத்தமுயன்ற பொலிசாருக்கும் அடியும், கடியும் விழுந்துள்ளது.

பெண் பொலிசார் ஒருவரும் தாக்கப்பட, அவரை டேஸர் மூலம் கட்டுப்படுத்த முயன்றுள்ளார்கள் பொலிசார். அவரைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அவர் படுகாயமடைய, அவரும் காயம்பட்ட பொலிசாரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
விசாரணை துவக்கம்
ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே சுயநினைவிழந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் உயிரிழ்ந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பொலிசாருக்கு மன நல ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கி வரும் நிலையில், அந்த புலம்பெயர்ந்தோர் மரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

Back to top button