தாயகம்

இலங்கையில் பரபரப்பு! பாரிய சத்தத்துடன் வெடித்த குண்டு!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்த சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) பகல் 12 தணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.


பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறிய கைக்குண்டு வாகரை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் இன்று பகல் காணியை துப்பரவு செய்துள்ளார். அதன் பின்னர் குப்பைகளை தீயிட்டு எரித்தப் போது கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடப்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button