தாயகம்

கிளிநொச்சியில் பரபரப்பு! மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை நேற்று மாலை 7 மணியளவில் மக்கள் இறுதியாக அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று(20) காலை சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button