பிரான்ஸ்

பிரான்ஸில் பரபரப்பான விவசாய கண்காட்சி! மக்ரோனின் முக்கிய கருத்து!

நேற்று பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமான விவசாய கண்காட்சியில் (Salon de l’agriculture) ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 13 மணிநேரங்கள் செலவிட்டிருந்தார்.
அரசுக்கும் விவசாயிகளுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் காலப்பகுதியில் ஆரம்பமான இந்த கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வு பெரும் பரபரப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

அதன்போது குழப்பம் மற்றும் மோதல்கள் இடம்பெற்றன. Porte de Versailles அரங்கிற்கு ஜனாதிபதி மக்ரோன் வருகை தந்திருந்த போது விவசாயிகள் பலர் கூச்சலிட்டனர். விசில் சத்தங்களை எழுப்பினர். FNSEA மற்றும் Jeunes agriculteurs அமைப்பினர் இந்த கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.


மேற்படி குழப்பமானது Rassemblement national அரசியல் கட்சியின் தூண்டுதலின் பேரில் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், ஜனாதிபதி மக்ரோன் இது தொடர்பாக தெரிவிக்கையில், “உங்களின் சிலர் அரசியல் பிரச்சாரங்களுக்காக வருகை தந்திருக்கிறீர்கள். உங்களது அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கோடு நீங்கள் வருகை தந்திருக்கிறீர்கள்.” என தெரிவித்தார்.

Back to top button