பிரான்ஸ்

அதிகரிக்கும் பாலியல் நோய்! அதிர்ச்சியில் பிரான்ஸ் மக்கள்!

கடந்த காலங்களை விடவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலியல் ரீதியான நோய்கள் கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (ECDC) மார்ச் 7 வியாழன் அன்று வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் பிரான்சிலும அதிகரித்து உள்ளது. பாலியல் ரீதியான கல்வி, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவை குறைவடைந்து உள்ளதால் இத்தகைய நோய்கள் அதிகரித்து செல்வதாகவும், ஓரினச் சேர்க்கையாளர்களின் முறையற்ற பாலியில் உறவும் இந்த நோய் அதிகரிப்புக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முறையற்ற, பாதுகாப்பற்ற பாலியில் தொழிலாளர்களால் பாலியல் நோய்கள் 48% சதவீத்தாலும், இளையோர் மத்தியில் தகுந்த பாலியல் உறவு கல்வியறிவு இல்லாமையினால் 34% சதவீதத்தினாலும் நோய்த்தொற்று அதிகரித்து செல்வதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Back to top button