ஐரோப்பிய நாடு ஒன்றில் பயங்கரம்! பலர் கவலைக்கிடம்!
ஐரோப்பிய நாடான போலந்தில் மக்கள் கூட்டத்தின் மீது அசுர வேகத்தில் பாய்ந்த வாகனத்தால் 3 சிறார்கள் உட்பட 17 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போலந்தின் Szczecin பகுதியில்
குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த வாகன சாரதி அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது, போலந்தின் Szczecin பகுதியிலேயே குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இதில் இருவர் நிலை கவலைக்கிடம் என்றும், ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 7 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அசுர வேகத்தின் வந்த அந்த வாகனம் ஒரு பாதசாரி கடவையில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்துள்ளது. இதனிடையே, அந்த வாகன சாரதி 33 வயது நபர் என அடையாளம் காணப்பட்டதுடன், பொதுமக்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மீது மோதிய பின்னர், பல வாகனங்கள் மீதும் அந்த நபர் தமது வாகனத்தை மோத விட்டதாக கூறப்படுகிறது. இது தீவிரவாத தாக்குதல் பொதுமக்களே அந்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவப்பகுதியில் பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும், மருத்துவ உதவிக்குழுவினரும் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், இது தீவிரவாத தாக்குதல் என கருத வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.