தாயகம்

தமிழர் பகுதியில் பகல் வேலையில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

#france news#

கண்டிவீதி பகுதியில் பகல் வேளையில் வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 62 வயதான கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி என்ற முதியவரே உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி S.H.மஹ்ரூஸ் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்று பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கரிப்பட்டமுறிப்பு அம்பகாமம் ஒலுமடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் விவசாயிகள் வீதிகளில் செல்ல முடியாத நிலை பாடசாலை மாணவர்கள் வீதிகளில் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பாக யானையின் தாக்கத்தால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளார்.

Back to top button