பிரான்ஸ்

தமிழர் பகுதியில் பயங்கர மோதல்! ஐவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இராமநாதபுரம் கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதாவது இந்த தாக்குதலில் 3 பெண்கள் உள்பட 5 காயமடைந்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரு தரப்பினரிடையில் வாக்குவாதம் முற்றியதால், எதிரே வந்தவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும், மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் பலத்த வெட்டுக்காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களில் வசிக்கும் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Back to top button