தாயகம்

ஒரு தலை காதலால் கொலை செய்யப்பட்ட மாணவி! வெளியான அதிர்ச்சி தகவல்!

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொடூர சம்பவம் நேற்று (24.02.2024) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய எஸ்.டயானா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதன்போது கொலைச் சந்தேகநபரான 21 வயது இளைஞரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button