பிரான்ஸ்
🔴🇫🇷பிரான்ஸில் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பனிப்பொழிவு காரணமாக இன்று வியாழக்கிழமை காலை 25 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் உள்ளிட்ட இல் து பிரான்சின் எட்டு மாவட்டங்களுக்கும், பா-து-கலே, Nord உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கும் என மொத்தமாக 25 மாவட்டங்களுக்கு விழிப்பு நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சுக்குள் நேற்று இரவு 5 செ.மீ இற்கும் மேலாக பனிப்பொழிவு பதிவானதாகவும், பல இடங்களில் வீதி விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் அறிய முடிகிறது.
பரிசை நோக்கிச் செல்லும் N2 நெடுஞ்சாலையில் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பரிசில் சில ட்ராம் சேவைகளும் பாதிகப்பட்டுள்ளன. A6, A104 மற்றும் D506 ஆகிய சாலைகளிலும் வாகனங்கள் மிக மெதுவாக நகர்கின்றன.