பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் மீட்கப்பட்ட சடலம்! வெளிவந்த முக்கிய தகவல்!

58 வயதுடைய வீடற்றவர் ஒருவரது சடலத்தை Sarcelles (Val-d’Oise) நகர காவல்துறையினர் தற்காலிய கூடாரம் ஒன்றில் இருந்து மீட்டுள்ளனர். கடும் குளிர் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் தீயணைப்பு வீரர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு வீடற்றவர் (SDF) ஒருவரது சடலத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. நேற்றைய இரவு இல் து பிரான்சுக்குள் -10℃ வரையான கடும் குளிர் நிலவியிருந்தது. முன்னதாக கடந்த வியாழக்கிழமை Carpentras (Vaucluse) நகரில் இருந்தும், Boulogne-Billancourt (Hauts-de-Seine) நகரில் இருந்தும் இரு வீடற்றவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button