உலகம்

கனடாவில் மரணமான இளைஞன்! வெளிவந்த தகவல்!

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது பெற்றோர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசின் உதவியை நாடியுள்ளார்கள். இந்திய இளைஞர் மரணம் கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Conestoga கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்துவந்தவர் ஷேக் முஸாம்மில் அஹமது ( Shaik Muzammil Ahmed, 25).


ஹைதராபாதைச் சேர்ந்த ஷேக்குக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் காய்ச்சலால் அவதியுற்றுவந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது நண்பர்களில் ஒருவர், இந்தியாவிலிருக்கும் ஷேக்கின் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

மகனுடைய மரணச் செய்தி கேட்டு ஷேக்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், தங்கள் மகனுடைய உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S.ஜெய்ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Back to top button