பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் காவல்துறையை கொல்வேன்! அல்லா அக்பர் என கோஷம்!

நபர் ஒருவர் காவல்துறையினரின் மகிழுந்து கண்ணாடியை உடைத்து, ‘அல்லா அக்பர்’ (இறைவனே பெரியவன்) என கோஷமிட்டுள்ளார். பின்னர் அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. Rue du Faubourg-Saint-Jacques வீதியில் காவல்துறையினர் தங்களது மகிழுந்தை நிறுத்திவிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, குறித்த மகிழுந்தை நெருங்கிய ஒருவர் நடைபாதைக் கல் ஒன்றை எடுத்து, அதன் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

’அல்லா அக்பர்.. நான் அனைத்து காவல்துறையினரையும் கொல்வேன்’ என கோஷமிட்டுக்கொண்டு அவர் கண்ணாடிகளை உடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பி ஓடிய நிலையில், சில நிமிடங்களிலேயே அவர் கைது செய்யப்பட்டார். கைது சம்பவத்தில் போது காவல்துறை வீரர் ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளானார்.

Back to top button