தாயகம்

காதலியுடன் விடுதியில் தங்க இளைஞன் செய்ய அதிர்ச்சி செயல்!

அம்பாறையில் தனது காதலியுடன் விடுதியில் தங்குவதற்குப் பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தைத் திருடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளையில் இருந்து அம்பாறைக்கு சென்ற இளைஞரே இவ்வாறு கைதாகியுள்ளார்.


பஸ் நிலையத்தில் காதலி
அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பஸ் நிலையத்தில் காதலியை நிற்குமாறு கூறிவிட்டு அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து குறித்த இளைஞன் பணத்தைத் திருடியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து பொலிஸார் யுவதியின் பெற்றோரை வரவழைத்து யுவதியை ஒப்படைத்த பொலிஸார், இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Back to top button