யாழில் இடம்பெறும் மோசடி! வெளியான முக்கிய தகவல்!
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸாரும் அண்மையில் கூறி இருந்தனர்.
காணி மோசடி
குறிப்பாக கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர். மேலும் சில நொத்தாரிசுகள் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு பிணையில் விடுவிக்கப்படுபவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் பலரும் தாயகத்தில் காணிகள் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.