பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் கத்திமுனையில் பாலியல் துன்புறுத்தல்!

இளம் பெண் ஒருவர் Châtelet தொடருந்து நிலையத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
டிசம்பர் 31, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடருந்து நிலையத்தின் நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரை 23 வயதுடைய ஒருவர் கத்தி ஒன்றின் மூலம் மிரட்டி பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார். அதற்கிடையில் காவல்துறையினர் மிக விரைவாக செயற்பட்டு, குறித்த நபரை சரணடையும் படி அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கி முனையில் அவரைக் கைது செய்தனர்.

Back to top button